Be Fire Safe

இந்த குளிர்காலத்தில் தீ அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருங்கள்

நெருப்பு வேகமாகப் பரவி, பேரழிவை உண்டாக்க முடியும், உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தக்கூடும். 3 நிமிடங்களுக்குள், உங்கள் வீட்டில் பரவும் நச்சுப் புகை மற்றும் தீப்பிழம்புகள் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் கடுமையான அபாயத்துக்குள்ளாக்கும்.

Translations

புகை எச்சரிக்கை ஒலிப்பான்கள் - நாங்கள் என்ன பரிந்துரைக்கிறோம்

புகை எச்சரிக்கை ஒலிப்பான் உதவிக் குறிப்புகள்

  1. அனைத்து வாழும் பகுதிகளிலும், நடைபாதைகளிலும், படுக்கையறைகளிலும் குறைந்தது ஒரு புகை எச்சரிக்கை ஒலிப்பானாவது வைத்திருக்கவும்
  2. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட புகை எச்சரிக்கை ஒலிப்பான்கள் -ஒரு எச்சரிக்கை ஒலிப்பானை இயக்கினால், அனைத்து புகை எச்சரிக்கை ஒலிப்பான்களும் ஒலிக்கும்
  3. உங்கள் புகை எச்சரிக்கை ஒலிப்பானை மாதம் ஒருமுறை சோதிக்கவும். சோதனை பட்டனை அழுத்திப் பிடித்துக் கொண்டு அது ஒலி எழுப்பும் வரை சோதிக்கவும்
  4. 6 மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் புகை எச்சரிக்கை ஒலிப்பானைத் தூசு தட்டித் சுத்தம் செய்யவும்
  5. ஒவ்வொரு வருடமும் மின்கலனை (அது 'அல்கலைன்' (alkaline) ஆக இருந்தால்) மாற்றவும்
  6. 10 வருடங்களுக்கு ஒருமுறை முழு எச்சரிக்கை ஒலிப்பானையும் மாற்றவும்.

உங்களிடம் ஒரு செயல்படக்கூடிய புகை எச்சரிக்கை ஒலிப்பான் உள்ளதா?

செயல்படக்கூடிய புகை எச்சரிக்கை ஒலிப்பான்கள் மட்டுமே உயிரைக் காப்பாற்றும், எங்கள் தீயணைப்பு வீரர்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று, உங்களுடையதைச் சரிபார்த்து, தீ பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்க முடியும்.

ஓர் இலவசப் பாதுகாப்பு வருகைக்கு முன்பதிவு செய்ய, உங்கள் உள்ளூர் தீயணைப்பு நிலையத்தை அணுகவும் அல்லது பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்யவும்: www.fire.nsw.gov.au/visits

நில உரிமையாளர்களுக்கும், முகவர்களுக்குமான உதவிக் குறிப்பு

நியூ சவுத் வேல்சில் உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாடகைக்கு விட்டிருக்கும் இடங்களில் புகை எச்சரிக்கை ஒலிப்பான்களைச் சரிபார்த்து, அவை வேலை செய்யும் நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். எச்சரிக்கை ஒலிப்பான் ஒன்று வேலை செய்யவில்லை என்றால், அதை இரண்டு வணிக நாட்களுக்குள் கட்டாயம் சரிசெய்தாக வேண்டும். fairtrading.nsw.gov.au

வீட்டில் தீ பாதுகாப்பு

தீயிலிருந்து தப்பிச் செல்லும் திட்டம்

  1. உங்கள் முகவரியை அறிந்து கொள்ளவும்
  2. ஒவ்வொரு அறையிலிருந்தும் தப்பித்து வெளியேற இரண்டு வழிகளை வைத்திருக்க முயற்சிக்கவும்
  3. வெளியேறும் வழிகளை தடங்கலில்லாமல் வைத்திருக்கவும்
  4. கதவு மற்றும் ஜன்னல் சாவிகளை பூட்டிலேயே வைத்திருக்கவும், அப்போதுதான் அவற்றை எளிதில் திறக்கமுடியும்
  5. உங்கள் சந்திப்பு இடத்தை அறிந்து கொள்ளவும் அது தீயணைப்பு வீரர்கள் உங்களைப் பார்க்க முடியும் வகையில் உங்கள் வீட்டின் முன்புறத்தில் இருக்க வேண்டும்
  6. உங்கள் தப்பிச் செல்லும் திட்டத்தை உங்கள் வீட்டில் உள்ள அனைவருடனும் அடிக்கடி பயிற்சி செய்யவும்.

உங்கள் புகை எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்தால் அல்லது நீங்கள் நெருப்பைப் பார்க்க நேர்ந்தால்:

  1. வெளியே செல்லுவதற்கு உங்களது வீட்டுத் தீயில் தப்பிச்செல்லும் திட்டத்தைப் பயன்படுத்தவும்
  2. தாழக் குனிந்து செல், செல், செல்
  3. உங்களால் முடியும் பட்சத்தில் உங்கள் பின்னால் கதவுகளை மூடவும்
  4. உங்கள் சந்திப்பு இடத்திற்குச் செல்லவும்
  5. X000 என்ற எண்ணை தொலைபேசியில் அழைத்து நெருப்பு (FIRE) என்று கேட்கவும்
  6. வெளியிலேயே இருக்கவும் - உங்கள் வீட்டிற்குள் மீண்டும் நுழைய வேண்டாம்
  7. தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்கவும்.

மற்ற எளிய உதவிக் குறிப்புகள்

  1. சமைக்கும் போது கவனமாக இருக்கவும்
  2. தீப்பிடிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் வெப்பமூட்டி (heater)/தீ அடுப்பு (fireplace) போன்றவற்றிலிருந்து ஒரு மீட்டர் தூரத்தில் வைத்திருக்கவும்
  3. வெளிப்புறச் சமையல் சாதனங்களை உள்ளே பயன்படுத்த வேண்டாம்
  4. உங்கள் மின் உலர்த்தியில் (dryer) உள்ள பஞ்சு வடிகட்டியை (lint filter) நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு அதைச் சுத்தம் செய்யவும்
  5. மெழுகுவர்த்திகளை திரைச்சீலைகளிலிருந்து தூர விலக்கி வைக்கவும், அத்துடன் அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம்
  6. மின்சாரப் பலகைகள் (powerboards) அல்லது மின் இணைப்புகளை (powerpoints) மிகைப்பளு (overload) செய்யவேண்டாம்
  7. உங்கள் புகைக் குழாய் (flue) மற்றும் புகைபோக்கி (chimney) தொடர்ந்து சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும்
  8. படுக்கையில் புகைபிடிக்கவோ அல்லது கோதுமைப் பைகளைப் (wheat bags) பயன்படுத்தவோ வேண்டாம்
  9. உங்கள் ஆடைகள் தீப்பிடித்தால் -நின்று, கீழே விழுந்து, மூடிக்கொண்டு, உருளவும்.

*உங்களுக்கென்று வீட்டுத் தீயில் தப்பச்செல்லும் திட்டத்தை உருவாக்கவும்

பதிவிறக்கம் செய்து அச்சிடவும்

லித்தியம்-அயான் மின்கலன் பாதுகாப்பு

மின்கலன் பாதுகாப்புக்கான உதவிக் குறிப்புகள்

  1. மின்-பைக்குகள் (e-bikes), மின்-ஸ்கூட்டர்கள் (e-scooters), மின் சாதனங்களை, வசிக்கும் பகுதிகள் மற்றும் வெளியேறும் வாசல்களில் இருந்து தள்ளி, வாகனம் நிறுத்துமிடத்தில் அல்லது கொட்டகையில் மட்டும் மின்னேற்றம் செய்யவும்.
  2. வீக்கம், கசிவு, நிறமாற்றம் அல்லது நாற்றம் வருதல் போன்ற சேத அறிகுறிகளைக் காட்டும் மின்கலன்களை அல்லது உபகரணங்களைப் பயன்படுத்தவோ அல்லது மின்னேற்றம் செய்யவோ கூடாது
  3. பொருத்தமான தரநிலைகளுக்கு உடன்படக்கூடிய, மற்றும் உங்கள் மின்கலன் அல்லது சாதனத்துடன் வழங்கப்பட்ட அல்லது இணக்கமானதாகக் கருதப்படும் மின்னேற்றக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தவும்
  4. நீண்ட காலத்திற்கோ (எ.கா. இரவு முழுவதும்) அல்லது கவனிக்கப்படாத வகையிலோ சாதனங்களை ஒருபோதும் மின்னேற்றம் செய்ய வேண்டாம்
  5. முழுமையாக மின்னேற்றம் ஆனபின் அணைத்துவிடவும்
  6. உங்கள் தலையணை மேலோ அல்லது படுக்கையிலோ தொலைபேசிகளை மின்னேற்றம் செய்யாதீர்கள், கடினமான பரப்புகளின் மேல் மட்டுமே சாதனங்களை மின்னேற்றம் செய்யவும்
  7. புகழ்பெற்ற வர்த்தகங்கள் மற்றும் சேவை வழங்குநர்களிடமிருந்து தயாரிப்புகளை வாங்கவும், அத்துடன் ஏற்கனவே உபயோகித்த (second hand) மின்கலன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.